ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் கைது


ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் கைது
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 14 Dec 2016 8:52 PM GMT)

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். பல்வேறு போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்

அலங்காநல்லூர்,

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதியை பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பல்வேறு விதமான போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். பாலமேடு மஞ்சமலை ஆறு பகுதியில் உள்ள வாடிவாசல் முன்பு சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர் மாட்டு வண்டியுடன் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கைது

இதைதொடர்ந்து பாலமேடு வாடிவாசல் பகுதியை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் தலைமையிலான போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதாநந்தகுமார், கூலி வேலைக்கு செல்லும் கிராம பெண்களை போன்று இடுப்பில் துண்டு, தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு மறவப்பட்டி செல்லும் சாலையில் செல்வம் என்பவருக்கு சொந்தமான மாட்டு வண்டியில் ஊர்வலமாக வருவது போலீசாருக்கு தெரியவந்தது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார், உரிய அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட முயன்றாக கூறி அவரை கைது செய்தனர். மாட்டு வண்டியுடன் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட முயன்றது பாலமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீர விளையாட்டுகளை மீட்டெடுக்க...

இந்த போராட்டம் குறித்து நர்மதா நந்தகுமார் கூறியதாவது:- எனது சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ., எம்.பில். பொருளாதாரம் படித்துள்ளேன். என் கணவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். காவிரி நதிநீர் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாவிட்டால் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு அழிந்து விடும். தமிழர்களின் வீர விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story