எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணை சித்தராமையா தகவல்


எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணை சித்தராமையா தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2016 9:48 PM GMT (Updated: 2016-12-15T03:18:11+05:30)

எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக சித்தராமையா கூறினார். எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– சி.ஐ.ட

பெங்களூரு,

எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக சித்தராமையா கூறினார்.

எச்.ஒய்.மேட்டியின் செக்ஸ் விவகாரம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சி.ஐ.டி. விசாரணை

எச்.ஒய்.மேட்டி விவகாரத்தில் சி.டி. வெளியாகியுள்ளது என்று எனக்கு தகவல் சொல்லப்பட்டது. இதையடுத்து மேட்டி தாமாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தை நான் அங்கீகரித்து கவர்னருக்கு அனுப்பியுள்ளேன். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், இதில் தனக்கு எதிராக சதி நடந்துள்ளதாகவும், அதனால் இதுபற்றி விசாரணை நடத்துமாறு மேட்டி என்னிடம் கூறினார்.

மேலும் இந்த பிரச்சினையில் உண்மைகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற காரணத்தினால் இதுபற்றி சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். முடிந்த வரை விசாரணையை விரைவாக நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். இந்த விவகாரம் எனக்கு முன்பே தெரியும் என்று சொல்வது தவறானது. எனக்கு அவ்வாறு முன்பே தெரிந்திருந்தால் மேட்டியில் ராஜினாமா கடிதம் பெற்று இருப்பேன்.

அவமானம் இல்லை

நான் 2 நாட்களுக்கு முன்பு, வீடியோ வெளியானால் உடனே மேட்டியிடம் ராஜினாமா கடிதம் பெறுவேன் என்று கூறினேன். அதன்படி மேட்டி ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரத்தால் அரசுக்கு அவமானம் எதுவும் இல்லை. மேலும் சிலர் மீது இத்தகைய புகார்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை அவ்வாறு ஏதேனும் சி.டி. இருந்தால் வெளியிடட்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story