காரைக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்


காரைக்குடியில்  பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 15 Dec 2016 12:41 PM GMT)

தொலை தொடர்பு கோபுரங்களை பராமரித்தல் பணியில் தனியாரை ஈடுபடுத்த முயற்சிப்பதை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். மேலும் மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு முழுவதும் 65 ஆயிரம் த

காரைக்குடி,

தொலை தொடர்பு கோபுரங்களை பராமரித்தல் பணியில் தனியாரை ஈடுபடுத்த முயற்சிப்பதை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். மேலும் மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு முழுவதும் 65 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்களை நிறுவி உள்ளது. இதன் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு பணிகளை பி.எஸ்.என்.எல். ஊழியர்களே செய்து வந்தனர். ஆனால் தற்போது அப்பணிக்காக தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களை ஈடுபடுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களை உள்ளடக்கிய காரைக்குடி பி.எஸ்.என்.எல். கோட்ட அலுவலகத்தில் 415 அலுவலர்கள், 90 அதிகாரிகள், 450 ஒப்பந்த ஊழியர்கள் என 955 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காரைக்குடி கோட்ட அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story