கடலூர் அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார்


கடலூர் அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Dec 2016 11:15 PM GMT (Updated: 15 Dec 2016 1:18 PM GMT)

கடலூர் அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார். துப்பாக்கி சுடும் பயிற்சி கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசாரின் திறமையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அவர்களுக்கு துப்பாக்கி சுடும

கடலூர்,

கடலூர் அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

துப்பாக்கி சுடும் பயிற்சி

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசாரின் திறமையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் பயிற்சி கடலூர் அருகே ராமாபுரம் துப்பாக்கி சுடும் மையத்தில் நேற்று தொடங்கியது.

இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் துப்பாக்கியால் இலக்கை நோக்கி குறி பார்த்து சுட்டார்.

பின்னர் இந்த பயிற்சி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

2,070 போலீசாருக்கு பயிற்சி

கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முதல் போலீஸ்காரர்கள் வரை அனைவருக்கும் ஆண்டுதோறும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மொத்தம் 2,070 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் முதல் நாளான இன்று (அதாவது நேற்று) 150 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும். பிஸ்டெல், ஏ.கே. 47, கார்பைன் கன், எஸ்.எல்.ஆர்., 303 போன்ற துப்பாக்கிகளில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது. 15 நாட்கள் பயிற்சியில் மொத்தம் 51 ஆயிரத்து 750 குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே போலீசார் இந்த பயிற்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

இந்த பயிற்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story