தூத்துக்குடி கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் கற்சிலையால் பரபரப்பு கடத்தி வரப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடி கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் கற்சிலையால் பரபரப்பு கடத்தி வரப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2016 8:00 PM GMT (Updated: 15 Dec 2016 3:36 PM GMT)

தூத்துக்குடி கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கிய கற்சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. கடத்தி வரப்பட்ட சிலையா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கிய கற்சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. கடத்தி வரப்பட்ட சிலையா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மன் கற்சிலை

தூத்துக்குடி ராஜபாளையம் கடற்கரை பகுதியில், நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் ஒரு கற்சிலை கரை ஒதுங்கி கிடந்தது. இதனை அந்த பகுதியில் சென்ற மீனவர்கள் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிலையை கைப்பற்றினர்.

ஒரு அடி உயரமும் 15 கிலோ எடையும் கொண்ட அந்த கற்சிலை அம்மன் சிலையாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடத்தல் சிலையா...?

அந்த சிலை எப்படி கடல் பகுதிக்கு வந்தது? என்பது பற்றியும், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கடலில் படகுகள் மூலம் சிலை கடத்தப்பட்ட போது தவறி கடலில் விழுந்ததா? என்றும்போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சமீப காலத்தில் ஏதேனும் சிலை திருடப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ராஜபாளையம் கடற்கரையில் இரவு நேரத்தில் அம்மன் கற்சிலை கரை ஒதுங்கியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story