ஆம்பூர் அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் காதலனுடன் தஞ்சம் கோர்ட்டு வளாகத்தில் தாய் தாக்கியதால் பரபரப்பு


ஆம்பூர் அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் காதலனுடன் தஞ்சம் கோர்ட்டு வளாகத்தில் தாய் தாக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T22:12:34+05:30)

ஆம்பூர் அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் காதலனுடன் கோர்ட்டில் தஞ்சம் அடைந்தார். கோர்ட்டு வளாகத்தில் தாய் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. காதல் திருமணம் ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகள் பிரியங்கா (வயது 21). இவர் ப

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் காதலனுடன் கோர்ட்டில் தஞ்சம் அடைந்தார். கோர்ட்டு வளாகத்தில் தாய் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் திருமணம்

ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகள் பிரியங்கா (வயது 21). இவர் பி.இ. முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

பிரியங்காவும், சோலூரை சேர்ந்த ராம்குமார் (22) என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பிரியங்காவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுறது. இதனால் காதல் ஜோடி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

கடத்தியதாக புகார்

இந்தநிலையில் பிரியங்காவின் தந்தை, ஆம்பூர் தாலுகா போலீசில் தனது மகளை ராம்குமார் கடத்தி சென்றுவிட்டதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த பிரியங்காவும், ராம்குமாரும் நேற்று ஆம்பூர் தாலுகா போலீசில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது காதல் கணவனுடன் செல்வதாக பிரியங்கா கூறியதை தொடர்ந்து ராம்குமாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

பரபரப்பு

அப்போது கோர்ட்டு வளாகத்தில் பிரியங்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூடி இருந்தனர். பிரியங்காவின் தாயார், கோர்ட்டில் இருந்து வெளியே வந்த மகள் பிரியங்கா மற்றும் ராம்குமாரை தாக்க ஆரம்பித்தார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் காதல் தம்பதியை மீட்டு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story