உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி சாலையில் விழுந்தவர் மீது டிராக்டர் சக்கரம் ஏறிய பரிதாபம்


உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி சாலையில் விழுந்தவர் மீது டிராக்டர் சக்கரம் ஏறிய பரிதாபம்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-15T23:48:57+05:30)

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சாலையில் விழுந்த விவசாயி மீது டிராக்டர் சக்கரம் ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள்கள் மோதல் உளுந்தூர்பேட்டை அருகே அங்கனூர் கிராமத்தை சேர்ந

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சாலையில் விழுந்த விவசாயி மீது டிராக்டர் சக்கரம் ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

உளுந்தூர்பேட்டை அருகே அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது60), விவசாயி. இவர் நேற்று மாலை எலவனாசூர்கோட்டையில் உள்ள ஒரு உரக்கடையில் விவசாய பயிர்களுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் அங்கனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் கள்ளக்குறிச்சி–உளுந்தூர்பேட்டை சாலையில் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், ஜோதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

டிராக்டர் சக்கரம் ஏறி பலி

அப்போது பின்னால் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சக்கரம், ஜோதியின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story