வங்கிகளில் பணத்தட்டுப்பாடு: அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதி


வங்கிகளில் பணத்தட்டுப்பாடு: அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 15 Dec 2016 6:25 PM GMT)

வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். பண புழக்கம் குறைந்தது 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, மக்களிடையே பணபுழக்கம் குறைந்து விட்டத

பொள்ளாச்சி,

வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

பண புழக்கம் குறைந்தது

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, மக்களிடையே பணபுழக்கம் குறைந்து விட்டது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்ததால் சில்லறை தட்டுப்பாடு பிரச்சினையும் அதிகரித்து உள்ளது. இதனால் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதுகிறது.

வங்கிகளில் ரூ.24 ஆயிரம் வரை கொடுக்கலாம் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் பண தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் ரூ.4,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஏ.டி.எம். சேவை முடங்கியது

மேலும் பொள்ளாச்சியில் 80 சதவீதம் ஏ.டி.எம். சேவை முடங்கி உள்ளது. ஏ.டி.எம். மையங்களில் பணம் வைத்த சில மணி நேரங்களிலேயே தீர்ந்து விடுகிறது. பணத்தை எடுக்க வங்கி ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து வருகின்றனர்.

ஏ.டி.எம். மையங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருவதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கொடுப்பதில்லை. அவற்றிற்கு முழுவதும் பெட்ரோல், டீசல் போட்டுகொள்ளுமாறு ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஓட்டி வைக்கப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட பின் வங்கிகளிலும் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பிட்ட வங்கிகளுக்கு மட்டும் அதிகளவு 100, 500 ரூபாய் நோட்டுக்கள் வருவதாக தெரிகிறது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதியில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படுவதில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.

கிணத்துக்கடவு, கோவில்பாளைம், தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு சில வங்கிகளில் கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. எனவே பணம் எடுக்க பிறகு வாருங்கள் என்று வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story