பழனி அரசு அருங்காட்சியகத்தில் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் சிறப்பு கண்காட்சி


பழனி அரசு அருங்காட்சியகத்தில் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் சிறப்பு கண்காட்சி
x
தினத்தந்தி 15 Dec 2016 6:40 PM GMT (Updated: 15 Dec 2016 6:40 PM GMT)

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழமை வாய்ந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் கண்காட்சி நடந்தது. நாணயங்கள் கண்காட்சி பழனி அரசு அருங்காட்சியகத்தில் உலக ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் பற்றிய சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. ஒட்டன்சத்திரம் இந்தியன் வங்கி கி

பழனி,

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழமை வாய்ந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் கண்காட்சி நடந்தது.

நாணயங்கள் கண்காட்சி

பழனி அரசு அருங்காட்சியகத்தில் உலக ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் பற்றிய சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. ஒட்டன்சத்திரம் இந்தியன் வங்கி கிளை உதவி மேலாளர் நாராயண மூர்த்தி கண்காட்சியை தொடங்கி வைத்தார். திருச்சியை சேர்ந்த பழமையான பொருட்கள் சேகரிப்பாளர் விஜயகுமார் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் வரவேற்றார். இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் உள்ள 200–க்கும் மேற்பட்ட நாடுகளின் ரூ.1 முதல் ரூ.100 டிரில்லியன் வரையிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.1 முதல் ரூ.1,000 மதிப்பிலான நாணயங்களும் இடம் பெற்றிருந்தன. பல்வேறு வடிவங்களில் நாணயங்கள் இருந்தன.

பல்வேறு வடிவங்கள்

கொண்டை ஊசி, கத்தி, சிப்பி, வட்டம், சதுரம், அருங்கோணம், கிடார், வனவிலங்குகள், ஈபிள் டவர் போன்ற வடிவங்களிலும், மன்னர் கால தங்க நாணயங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்கு பின்பும் வெளியான பல்வேறு வகையான நோட்டுகள், நாணயங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

உலக முழுவதிலும் உள்ள ரூபாய் நோட்டுகளில், அந்த நாட்டின் மொழிகளில் 2 அல்லது 3 மொழிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ரூபாய் நோட்டில் 17 மொழிகள் அச்சடிக்கப்பட்டிருப்பது சிறப்பு ஆகும். இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டு மட்டுமே அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது.

மீதமுள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகிறது. இந்த கண்காட்சியில் சரித்திர கால நாணயங்கள் மற்றும் சமஸ்தானங்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.


Next Story