தாம்பரம், பாடியில் உடல் துண்டாகி இறந்து கிடந்தவர் பெருங்களத்தூர் புரோகிதர் விபத்தா? கொலையா? போலீசார் விசாரணை


தாம்பரம், பாடியில் உடல் துண்டாகி இறந்து கிடந்தவர் பெருங்களத்தூர் புரோகிதர் விபத்தா? கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2016 11:15 PM GMT (Updated: 2016-12-16T01:52:23+05:30)

தாம்பரம் பைபாஸ் சாலை மற்றும் பாடியில் உடல் துண்டாகி இறந்து கிடந்தவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த புரோகிதர் வாசுதேவன் என்பது தெரியவந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துண்டாகி கிடந்த உடல்

தாம்பரம் பைபாஸ் சாலை மற்றும் பாடியில் உடல் துண்டாகி இறந்து கிடந்தவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த புரோகிதர் வாசுதேவன் என்பது தெரியவந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துண்டாகி கிடந்த உடல்

சென்னையை அடுத்த தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் வார்தா புயல் வீசிய மறுநாள் தலைநசுங்கிய நிலையில் உடலில் இடுப்பு பகுதி வரை ஆண் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாம்பரம் போலீசார் பாதி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே புறவழிச்சாலையில் கொரட்டூர் அருகே உள்ள பாடியில் இடுப்பு பகுதியின் கீழ் கால் பகுதி வரை பாதி உடல் துணியில் சுற்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது. கொரட்டூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

பெருங்களத்தூர் புரோகிதர்

உடல் துண்டாகி கிடந்தவர் யார்? என்று தாம்பரம் மற்றும் கொரட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்தவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த வாசுதேவன் (வயது 70) என்பது நேற்று தெரியவந்தது. மேலும் அவர் புரோகிதர் தொழில் செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வாசுதேவன் நண்பரை பார்த்து விட்டு வரும் வழியில் சம்பவம் நடந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் சிக்கியதில் டிரைவர் வாகனத்தில் சிக்கிய பாதி உடலை தாம்பரத்தில் வீசி சென்றாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

உடல் கருகி சாவு

* மாதவரம் மேதாநகரில் கொசுவர்த்தி சுருளில் இருந்து பரவிய தீயில் சோபா எரிந்தது. இந்த புகையில் சிக்கி மூச்சு திணறி பிரியாணி கடைக்காரர் முகம்மது கோயா (45) என்பவர் உயிரிழந்தார்.

* புழலில் பெட்ரோல் கேன் அருகில் சிகரெட் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சுப்பிரமணி (56) உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்த மோட்டார் சைக்கிளும் நாசமானது.

* புயலால் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் செங்குன்றம், புழல் பகுதி மக்கள் நேற்று 4–வது நாளாக மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

* வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வினோத் என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

கார் மோதி பலி

* மீனம்பாக்கத்தில் நேற்று கார் மோதி விமான நிறுவன ஊழியர் ராஜசேகர் (33) இறந்தார். இதுதொடர்பாக டிரைவர் சுந்தரம் (26) கைது செய்யப்பட்டார்.

* திருமுல்லைவாயல் அருகே மின்சாரம் வழங்கக்கோரி நேற்று மாலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் உள்ளகரம், வாணுவம்பேட்டையிலும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* மின்சாரம் வழங்கக்கோரி குரோம்பேட்டை, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடந்தது. பல்லாவரம் நகராட்சி அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைச்சர் தங்கமணி சமாதானம் செய்தார்.

* பட்டாபிராமில் குடும்பத்தகராறில் தீக்குளித்த லட்சுமி (23) சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இறந்தார். லட்சுமியின் கணவர் பிரேம்குமார் போலீஸ் வேன் டிரைவராக உள்ளார். சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.Next Story