தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தி 1,000 விவசாயிகள் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு


தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தி 1,000 விவசாயிகள் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு
x
தினத்தந்தி 15 Dec 2016 8:55 PM GMT (Updated: 2016-12-16T02:25:44+05:30)

முசிறியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொருளாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சடையன், பெரியசாமி, பழனியாண்டி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சங்கத்த

முசிறியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொருளாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சடையன், பெரியசாமி, பழனியாண்டி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு, விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். கூட்டத்தில், துறையூர் அருகே முருங்கப்பட்டி கிராமத்தில் வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், வெடி விபத்திற்கு காரணமான ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக முதல்–அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது, திருச்சி மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு உதவ அரசை கேட்டுக்கொள்வது, பருவ மழை இல்லாமலும், காவிரியில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசை கேட்டுக்கொள்வது, தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இருந்து ஆயிரம் விவசாயிகளுடன் டெல்லிக்கு சென்று பாரத பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நிர்வாகி பாலு வரவேற்றார். முடிவில் நடராஜன் நன்றி கூறினார்.


Next Story