புதுக்கோட்டையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்- ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்- ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T03:16:06+05:30)

புதுக்கோட்டையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்- ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் பி.எஸ்.என்.எல். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு என்.எப்.டி. மாநில பொறுப்பாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். கிளை தலைவர் முத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரன், மாரியப்பன், நடராஜன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வாழ்வாதாரத்தை தகர்க்க கூடிய வகையில் அரசு உத்தேசித்து உள்ளதாக கூறி, தனி டவர் நிறுவனம் முன் மொழிவை கைவிடக்கோரி இந்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story