ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பயிற்சி முகாம்


ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 15 Dec 2016 9:49 PM GMT)

ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பயிற்சி முகாம்

பொன்னமராவதி,

ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பயிற்சி முகாம் பொன்னமராவதியில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்ட வழங்கல் அலுவலர் செல்வகணபதி, ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுக்கு மாற்றம் செய்வதற்கு இறுதி கட்டமாக வீடு, வீடாக சென்று அதற்காக கொடுக்கப்பட்டு உள்ள காலங்களை பூர்த்தி செய்து தணிக்கை செய்வது எப்படி என்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிதம்பரம், தாசில்தார் மோகன்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சேகர், தங்கராஜ், ஞானசேகர், தனிவருவாய் ஆய்வாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி தாலுகாவில் 28 ஆயிரத்து 720 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த தணிக்கை பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் 65 பேர் ஈடுபட உள்ளனர். இந்த பணி 15 நாட்கள் நடைபெற உள்ளது.

Next Story