கோடிமுனையில் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


கோடிமுனையில் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2016 10:30 PM GMT (Updated: 15 Dec 2016 9:53 PM GMT)

கோடிமுனையில் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

குளச்சல்,

கோடிமுனையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோடிமுனை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பறக்கும் படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகளுடன் அவர் அந்த பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பொது கழிவறை ஒன்றில் மூடை, மூடையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 80 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து 2 டன் ரேஷன் அரிசியையும் உடையார்விளை குடோனில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Next Story