ஜெயலலிதா மறைவால் மனமுடைந்த அ.தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை


ஜெயலலிதா மறைவால் மனமுடைந்த அ.தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 Dec 2016 10:23 PM GMT (Updated: 2016-12-16T03:53:28+05:30)

ஜெயலலிதா மறைவால் மனமுடைந்த அ.தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அ.தி.மு.க. கிளை செயலாளர் தற்கொலை நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலமநல்லு£ர் ஊராட்சியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 72). அ.தி.மு.க கிளை செயலாளராக உள்ளார். ஜ

செம்பனார்கோவில்,

ஜெயலலிதா மறைவால் மனமுடைந்த அ.தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அ.தி.மு.க. கிளை செயலாளர் தற்கொலை

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலமநல்லு£ர் ஊராட்சியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 72). அ.தி.மு.க கிளை செயலாளராக உள்ளார். ஜெயலலிதாவின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்த கலியமூர்த்தி, ஜெயலலிதா மறைவால் மனமுடைந்து சோகத்துடன் காணப்பட்டார். மேலும் வீட்டில் யாரிடமும் பேசாமலும், உணவு சாப்பிடாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 13–ந் தேதி காலை தனது வீட்டின் பின்புறம் கலியமூர்த்தி, விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கலியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடிதம்

இறந்த கலியமூர்த்தி விஷம் குடிப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை கட்சியினர் மற்றும் குடும்பத்திற்கு எழுதி வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– நான், அனுதினமும் வணங்கிய கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறந்த பின்பு இந்த உலகில் உயிர் வாழ எனக்குவிருப்பமில்லை என குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க. கிளை செயலாளர் கலியமூர்த்தி விஷம் குடித்து இறந்த தகவல் அறிந்த பவுன்ராஜ் எம்.எல்.ஏ., செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெனார்த்தனம், முன்னாள் கவுன்சிலர் ஜோதி, ஊராட்சி செயலாளர் நடராஜன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர், கலியமூர்த்தி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தற்கொலை செய்து கொண்ட கலியமூர்த்திக்கு நாகம்மாள் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.Next Story