மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் மேயர் பத்மாவதி பேச்சு


மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் மேயர் பத்மாவதி பேச்சு
x
தினத்தந்தி 15 Dec 2016 11:46 PM GMT (Updated: 2016-12-16T05:16:25+05:30)

பெங்களூருவில் நேற்று ஒரு தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பான பசுமை விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர். இந்த ஊர்வலத்தை மேயர் பத்மாவதி கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:– பூங்கா நகரமான பெங்களூருவில் மக்கள்தொகை பெருக்கம

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று ஒரு தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பான பசுமை விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர். இந்த ஊர்வலத்தை மேயர் பத்மாவதி கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:–

பூங்கா நகரமான பெங்களூருவில் மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுற்றுப்புற சூழல் மாசு அடைவது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

எனவே, நகரில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகளும் இத்தகைய ஊர்வலத்தை நடத்தி மக்களிடையே மாசு கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் கொடுக்க வேண்டும். இதன் மூலம் குப்பை பிரச்சினையை நிர்வகிக்கும் பணி எளிமையாகும்.

இவ்வாறு மேயர் பத்மாவதி பேசினார்.


Next Story