என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு சரக்கு ஆட்டோ–மோட்டார் சைக்கிள் மோதல்:


என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு சரக்கு ஆட்டோ–மோட்டார் சைக்கிள் மோதல்:
x
தினத்தந்தி 16 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T19:12:14+05:30)

இளம்பிள்ளை அருகே சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் இறந்து போனார். என்ஜினீயரிங் மாணவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்து உள்ள பெருமாகவுண்டம்பட்டி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன்

இளம்பிள்ளை,

இளம்பிள்ளை அருகே சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் இறந்து போனார்.

என்ஜினீயரிங் மாணவர்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்து உள்ள பெருமாகவுண்டம்பட்டி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் கீர்த்திராஜூ (வயது 21). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இ.இ.இ. 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று காலை இளம்பிள்ளையில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது வேலுமாத்தானூர் பகுதியில் சென்றபோது, சேலம் பக்கம் இருந்து இரும்பாலை நோக்கி எந்திரம் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோவும், இவருடைய மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

சாவு

இதில் படுகாயம் அடைந்த கீர்த்திராஜூவை அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்துபோன கீர்த்திராஜூ, தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமாரின் தம்பி மகன் ஆவார்.


Next Story