கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 16 Dec 2016 7:30 PM GMT (Updated: 16 Dec 2016 2:50 PM GMT)

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

‘சி–ஆர்ம்‘ கருவி

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான ‘சி–ஆர்ம்‘ என்ற நவீன கருவி அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கேசவன். கூலி தொழிலாளி. இவருக்கு விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதல்– அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேசுவரி ஆலோசனையின்பேரில், எலும்பு முறிவு டாக்டர்கள் மோசஸ்பால், பாலாஜி, மயக்கவியல் டாக்டர் சுகிர்தராஜ் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் ‘சி–ஆர்ம்‘ கருவியின் மூலம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினர்.

முதல் முறையாக...

இன்னும் ஒரு வாரத்தில் கேசவன் பூரண குணம் அடைந்து விடுவார் என்றும், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு உள்ளது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அரசு ஆஸ்பத்திரியில் நவீன கருவி மூலம் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை அனைவரும் பாராட்டினர்.

Next Story