ஸ்ரீமுஷ்ணம் அருகே தரமற்ற சாலை அமைப்பதாக கூறி கிராம மக்கள் போராட்டம்


ஸ்ரீமுஷ்ணம் அருகே தரமற்ற சாலை அமைப்பதாக கூறி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2016 6:25 PM GMT (Updated: 16 Dec 2016 6:24 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் சோழத்தரம் அருகே புடையூர் கிராமம் உள்ளது. இங்கு 800–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் வெளியூர் செல்வதற்கு பஸ் ஏற வேண்டுமென்றால் அங்குள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமுடைய சாலையை கடந்து சோழத்தரம் மெயின்ரோட்டு

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் சோழத்தரம் அருகே புடையூர் கிராமம் உள்ளது. இங்கு 800–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் வெளியூர் செல்வதற்கு பஸ் ஏற வேண்டுமென்றால் அங்குள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமுடைய சாலையை கடந்து சோழத்தரம் மெயின்ரோட்டுக்கு வரவேண்டும்.

இந்த கிராமத்து சாலை போடப்பட்டு 22 ஆண்டுகளான நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் புதிய தார் சாலை அமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வந்தது.

இந்த நிலையில், சாலை தரமற்ற முறையில் அமைப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தரமான முறையில் சாலை அமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story