பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கியது


பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கியது
x
தினத்தந்தி 16 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-17T01:19:35+05:30)

பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலையில் 2016–17–ம் ஆண்டிற்கான கரும்பு அரவையினை ஆலையின் தலைமை நிர்வாகி தொடங்கி வைத்தார். கரும்பு அரவை தொடக்கம் பெரம்பலூர் அருகே எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையின் 2016–2017ம் ஆண்டிற்கான அரவை பருவ தொடக்க விழா நேற்று நடைபெற்ற

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலையில் 2016–17–ம் ஆண்டிற்கான கரும்பு அரவையினை ஆலையின் தலைமை நிர்வாகி தொடங்கி வைத்தார்.

கரும்பு அரவை தொடக்கம்

பெரம்பலூர் அருகே எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையின் 2016–2017ம் ஆண்டிற்கான அரவை பருவ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஆலையின் தலைமை நிர்வாகி சங்கரநாராயணன் அரவை எந்திரத்திற்குள் கரும்பினை செலுத்தி நடப்பாண்டிற்கான அரவையை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி நிருபர்களிடம் கூறியதாவது:–

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2016–2017 அரவைப் பருவத்திற்கு 11,455 ஏக்கரில் 5,288 கரும்பு விவசாயிகளால் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2016–207 அரவைப் பருவத்திற்கு 3.50 லட்சம் மெட்ரிக்டன்கள் அரவைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெட்ரிக் டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேலும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அலங்காநல்லு£ரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், 25 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு சேத்தியாதோப்பில் உள்ள எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் கரும்பு பரிமாற்றம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2016–2017 அரவை பருவமானது 16.12.2016–ல் தொடங்கி 16.5.2017 அன்று கரும்பு அரவையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே கரும்பு விவசாயிகள், வாகன உரிமையாளர்கள் வாகன ஓட்டுநர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இந்த அரவைப் பருவம் சிறப்புடன் நடைபெற தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எறையூர் சர்க்கரை ஆலை கரும்பு அபிவிருத்தி அலுவலர் ரவிச்சந்திரன், தலைமைக் கணக்கர் குப்பன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மனோண்மணி, தலைமை பொறியாளர் ராஜேந்திரன், நிர்வாக அலுவலர் ரவி மற்றும் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story