புழலில் 10–ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


புழலில் 10–ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-17T01:27:28+05:30)

புழலில் 10–ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 10–ம் வகுப்பு மாணவர் சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் சபரி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் கிஷோர் (வயது 15). இவர், புழல் புத்தகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிய

செங்குன்றம்,

புழலில் 10–ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

10–ம் வகுப்பு மாணவர்

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் சபரி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் கிஷோர் (வயது 15). இவர், புழல் புத்தகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை சண்முகம் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டார். கிஷோர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 11 மணியளவில் சண்முகம் தனது மனைவியுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தங்கள் மகன் கிஷோர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் மாணவர் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் கிஷோர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story