சாலைகிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் நிலையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


சாலைகிராமத்தில்  ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் நிலையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 17 Dec 2016 12:55 PM GMT)

சாலைகிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனி ஒன்றியம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளது சாலைகிராமம். மாவட்டத்திலேயே அதிக ஊராட்சிகளை கொண்டது இளையான்குடி ஒன்றியம். இப்பகு

இளையான்குடி,

சாலைகிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனி ஒன்றியம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளது சாலைகிராமம். மாவட்டத்திலேயே அதிக ஊராட்சிகளை கொண்டது இளையான்குடி ஒன்றியம். இப்பகுதியில் உள்ள சாலைகிராமம் பகுதியை சுற்றி 33 ஊராட்சிகளும், 100–க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இதனால் சாலைகிராமத்தை தனி ஒன்றியமாக உயர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இருப்பினும் இந்த பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றி தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் சாலைகிராமத்தை இதுவரை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவே இல்லை. இதேபோல் சாலைகிராமத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சாலைகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று வலியுறுத்தியபோது, கோரிக்கைகளுக்காக மக்கள் குறைதீர்க்கும் முகாம் சாலைகிராமத்தில் நடைபெற்றது. அப்போது முகாமில் கலந்து கொண்ட வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, சாலைகிராமத்தில் பஸ் நிலையம் அமைக்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனமூலம் அந்த பஸ் நிலையத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படும் என்றும், அதன்பின்னர் பஸ் நிலையத்திற்கு தேவையான கட்டிட பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். ஆனால் கிராமமக்கள், சாலைகிராமம் பகுதியில் உள்ள ஊருணி, கண்மாய், சாலையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, பஸ் நிலைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை

இந்தநிலையில் சம்பவத்தன்று ஆக்கிரமிப்புகளை அகற்றப்படாமலேயே பஸ் நிலையத்தில் பேவர் பிளாக் கற்களை பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் சாலைகிராமம் பகுதி மக்கள் தங்களது கோரிக்கையான ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், முதல்–அமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


Next Story