வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரி சாம்பசிவராவ் அலிபிரி மலைப்பாதையில் நடந்து வந்து ஆய்வு


வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரி சாம்பசிவராவ் அலிபிரி மலைப்பாதையில் நடந்து வந்து ஆய்வு
x
தினத்தந்தி 17 Dec 2016 11:00 PM GMT (Updated: 17 Dec 2016 5:55 PM GMT)

திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் அலிபிரி நடைபாதை வழியாக நடந்து வந்து வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடந்து வந்த அதிகாரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1–ந்தேதி ஆங்கில புத்தாண்டு விழா, 8–ந

திருமலை,

திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் அலிபிரி நடைபாதை வழியாக நடந்து வந்து வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நடந்து வந்த அதிகாரி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1–ந்தேதி ஆங்கில புத்தாண்டு விழா, 8–ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 9–ந்தேதி வைகுண்ட துவாதசி விழா ஆகியவை நடக்கிறது. அதையொட்டி திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் நேற்று அலிபிரி மலைப்பாதையில் நடந்து வந்து முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமலைக்கு வந்த அவர், பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழா நடைபெற உள்ளது. அதையொட்டி திருமலை முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறேன். அலிபிரி மலைப்பாதையில் நடந்து வந்து ஆய்வு செய்தேன். ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவின்போது அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பரகாமணி சேவா குலு

பாத யாத்திரையாக திருமலைக்கு வரும் திவ்ய தரிசன பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகளில் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள், தரிசன வசதி, அன்னதானம் ஆகியவை சிறப்பாக செய்து கொடுக்கப்படும். 2017–ம் ஆண்டு புதிய காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை திருமலையில் பல இடங்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் திருப்பதியில் உள்ள பரகாமணி சேவா குலு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாணயங்கள், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் ஆகியவற்றை விரைந்து எண்ணி முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நிதித்துறை அதிகாரி பாலாஜி, முதன்மை என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி, பரகாமணி சேவா குலு அதிகாரி சந்திரசேகர்பிள்ளை மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story