ஆரல்வாய்மொழி அருகே விபத்து லாரி, மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது

ஆரல்வாய்மொழி அருகே விபத்து லாரி, மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-18T03:05:25+05:30)

ஆரல்வாய்மொழி அருகே விபத்து லாரி, மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது

ஆரல்வாய்மொழி,

தூத்துக்குடியில் இருந்து உப்பு மூடைகள் ஏற்றிய லாரி கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் மரப்பாலம் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரம் நின்ற ஒரு மின்கம்பத்தில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் காயமடைந்தார்.

லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்தது. மேலும், அதன் அருகில் நின்ற 2 மின்கம்பங்களும் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தினர்.

Next Story