முன்னாள் மந்திரி சிதம்பரநாதன் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவிப்பு

முன்னாள் மந்திரி சிதம்பரநாதன் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-18T03:05:25+05:30)

முன்னாள் மந்திரி சிதம்பரநாதன் உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவிப்பு

நாகர்கோவில்,

மொழிப்போர் தியாகியும், முன்னாள் மந்திரியுமான சிதம்பரநாதன் நினைவு தினத்தையொட்டி நேற்று நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா தலைமை தாங்கி, சிதம்பரநாதன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் டாக்டர் சிவகுமார், தங்கம் நடேசன், மகேஷ் லாசர், குமரி முருகேசன், மனோஜ், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story