இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது


இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2016 10:59 PM GMT (Updated: 2016-12-18T04:29:29+05:30)

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா அருகே ஆனந்தரெட்டி லே–அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக பரப்பனஅக்ரஹாரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இளம்பெண்களை வை

பெங்களூரு

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா அருகே ஆனந்தரெட்டி லே–அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக பரப்பனஅக்ரஹாரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அல்காஷ்சிங்(வயது 23), தர்ஷன்(27), நயீம் ஆகியோர் என்று தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 இளம்பெண்களுக்கு பெங்களூருவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து வந்துள்ளனர். பின்னர் இளம்பெண்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல், அவர்களை விபசாரத்தில் தள்ளியதும் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, 2 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கம், செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் 3 பேர் மீதும் பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story