விழுப்புரத்தில் ரூ.2 கோடியில் ரெயில்வே மேம்பாலம் விரைவில் சீரமைப்பு போக்குவரத்தை மாற்றியமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு


விழுப்புரத்தில் ரூ.2 கோடியில் ரெயில்வே மேம்பாலம் விரைவில் சீரமைப்பு போக்குவரத்தை மாற்றியமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 18 Dec 2016 4:30 PM GMT)

விழுப்புரத்தில் ரூ.2 கோடியில் ரெயில்வே மேம்பாலம் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது. இதையொட்டி போக்குவரத்தை மாற்றியமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ரெயில்வே மேம்பாலம் விழுப்புரம்– புதுச்சேரி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. ஆங்கிலேயர் கா

விழுப்புரம்,

விழுப்புரத்தில் ரூ.2 கோடியில் ரெயில்வே மேம்பாலம் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது. இதையொட்டி போக்குவரத்தை மாற்றியமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

ரெயில்வே மேம்பாலம்

விழுப்புரம்– புதுச்சேரி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமைவாய்ந்த இந்த மேம்பால சாலையின் நடுவில் அளவில் பள்ளம் ஏற்பட்டது. பின்னர் அந்த பள்ளத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.

ரூ.2 கோடியில் சீரமைப்பு

அதனை தொடர்ந்து இந்த பாலத்தை சீரமைப்பது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர். அதன் அடிப்படையில் இந்த மேம்பாலத்தை சீரமைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசு ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் இந்த பாலத்தில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை மட்டும் துண்டித்து 3 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் கல்வெட்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

இதையொட்டி மேம்பாலம் சீரமைப்பு பணிகள் தொடர்பாகவும், போக்குவரத்தை மாற்றியமைப்பது தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் எல்.சுப்பிரமணியன் உத்தரவின்படி நேற்று காலை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, விழுப்புரம் ரெயில்வே மேம்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை தொடங்கும் விதம் குறித்தும், அவ்வாறு பணி மேற்கொள்ளும்போது பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாதவாறு வாகன போக்குவரத்தை எந்தெந்த பாதைகளில் மாற்றியமைப்பது ஆகியவை குறித்து போலீசாருடனும், வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, கோட்டாட்சியர் ஜீனத்பானு கூறுகையில், ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதையொட்டி கலெக்டரின் உத்தரவின்படி ஆய்வு செய்துள்ளோம். இதன் ஆய்வறிக்கை ஓரிரு நாளில் கலெக்டருக்கு சமர்பிக்கப்படும். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் ஆலோசனை செய்து பணிகளை தொடங்குவது குறித்தும், போக்குவரத்தை மாற்றியமைப்பது குறித்தும் முடிவு செய்வார்கள் என்றார்.

இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா, தாசில்தார் வெற்றிவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஆறுமுகம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தன்ராஜ், நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தாக் கமால், என்ஜினீயர் சுரேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story