மழை இல்லாததால் கடு வறட்சி: சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள்


மழை இல்லாததால் கடு வறட்சி: சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள்
x
தினத்தந்தி 18 Dec 2016 9:45 PM GMT (Updated: 2016-12-19T00:56:31+05:30)

மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர். மழை இல்லாததால் வறட்சி பொள்ளாச்சி பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தப்படி பெய்யவில்லை. மேலும் கடந்த மாதம் பெய்ய வே

பொள்ளாச்சி,

மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர்.

மழை இல்லாததால் வறட்சி

பொள்ளாச்சி பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தப்படி பெய்யவில்லை. மேலும் கடந்த மாதம் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழையும் இன்னும் பெய்ய தொடங்கவில்லை. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். விலை தண்ணீர் வாங்கி, தென்னை போன்ற பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதற்கிடையில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு பாசனத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால் தண்ணீர் சேமிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

தெளிப்பு நீர் பாசனம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–

பொள்ளாச்சி பகுதியில் மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு பாசன முறையில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தெளிப்பு நீர் பாசனம் செய்ய ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் வரை செலவாகிறது. இதன் மூலம் 50 சதவீதம் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும். இதே சொட்டுநீர் பாசனத்தில் 70 சதவீதம் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுகிறது.

இதற்கு 5 குதிரை திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் கருகி விடுகிறது. இதில் இருந்து பயிர்களை காப்பாற்ற தினமும் ஒரு மணி நேரம் தெளிப்பு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. எனவே அரசு சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திற்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story