விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: பாமாயில், கொண்டைக் கடலை விலை உயர்வு சீனி, கடலை எண்ணெய் விலை குறைந்தது


விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: பாமாயில், கொண்டைக் கடலை விலை உயர்வு சீனி, கடலை எண்ணெய் விலை குறைந்தது
x
தினத்தந்தி 18 Dec 2016 7:27 PM GMT (Updated: 18 Dec 2016 7:27 PM GMT)

விருதுநகர், விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில், கொண்டைக் கடலை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ள நிலையில் சீனி, கடலை எண்ணெய் விலை குறைந்துள்ளது. உளுந்து விருதுநகர் மார்க்கெட்டில் உளு

விருதுநகர்,

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில், கொண்டைக் கடலை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ள நிலையில் சீனி, கடலை எண்ணெய் விலை குறைந்துள்ளது.

உளுந்து

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடைக்கு ரூ.6,000 முதல் ரூ.6,200 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.8,000 முதல் ரூ.8,800 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.6,000 முதல் ரூ.8,200 வரையிலும் விற்பனை ஆனது. துவரை 100 கிலோ மூடைக்கு ரூ.4,600 முதல் ரூ.5,600 வரையிலும், துவரம் பருப்பு ரூ.9,500 முதல் ரூ.10,500 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பயறு 100 கிலோ மூடைக்கு ரூ.6,200 முதல் ரூ.6,700 வரையிலும், பாசிபருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.8,000 முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

மல்லி லயன் ரகம் 40 கிலோ மூடைக்கு ரூ.3,000 முதல் ரூ.3,100 வரை விற்பனை ஆனது. மல்லி நாடு ரகம் ரூ.3,100 முதல் ரூ.3,200 வரையிலும் விற்பனை ஆனது. வத்தல் (குவிண்டாலுக்கு) சம்பா ரகம் ரூ.12,600 முதல் ரூ.13,200 வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.12,600 முதல் ரூ.13,300 வரையிலும், முண்டு வத்தல் குவிண்டாலுக்கு ரூ.17,000 முதல் ரூ.18,000 வரையிலும் விலை சொல்லப்பட்டது.

எண்ணெய்

விருதுநகர் எண்ணெய் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.10 விலை குறைந்து ரூ.2,110 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.1,605 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.1,350 ஆகவும் விற்பனை ஆனது. நிலக் கடலை பருப்பு 80 கிலோ மூடைக்கு ரூ.6,300 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ மூடைக்கு ரூ.4,500 ஆகவும், எள் புண்ணாக்கு 65 கிலோ ரூ.1,820 ஆகவும் விற்பனை ஆனது. பாமாயில் 15 கிலோவுக்கு ரூ.40 விலை உயர்ந்து ரூ.1,030 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.2,890 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

சீனி

விருதுநகர் சீனி மார்க்கெட்டில் சீனி குவிண்டாலுக்கு ரூ.20 விலை குறைந்து ரூ.3,890 ஆகவும், கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.10,800 ஆகவும், பொரிகடலை 55 கிலோவுக்கு ரூ.300 விலை உயர்ந்து ரூ.7,610 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.2,350 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.2,840 முதல் ரூ.3,900 வரையிலும், மசூர் பருப்பு ரூ.9,000 முதல் ரூ.9,600 வரையிலும், ரவை 25 கிலோவுக்கு ரூ.1,042 ஆகவும், மைதா முதல் ரகம் 90 கிலோ ரூ.3,145 ஆகவும், 2-வது ரகம் ரூ.2,395 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டா 50 கிலோ ரூ.1,255 ஆகவும் விற்பனை ஆனது. கோதுமை தவிடு 35 கிலோ ரூ.770 ஆகவும் விற்பனையானது.

விருதுநகர் காபி மார்க்கெட்டில் காபி பிளாண்டேசன் பிபி ரகம் 50 கிலோ ரூ.13,250 ஆகவும், ஏ ரகம் ரூ.13,300 ஆகவும், சி ரகம் ரூ.10,750 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.7,850 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.7,300 ஆகவும் விற்பனை ஆனது.

Next Story