நிரந்தர பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் மாவட்ட அ.தி.மு.க. தீர்மானம்


நிரந்தர பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் மாவட்ட அ.தி.மு.க. தீர்மானம்
x
தினத்தந்தி 18 Dec 2016 7:30 PM GMT (Updated: 2016-12-19T01:00:01+05:30)

சிவகாசி, அ.தி.மு.க. வின் நிரந்தர பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தி

சிவகாசி,

அ.தி.மு.க. வின் நிரந்தர பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெய லலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது கூறியதாவது;-

ஜெயலலிதா கட்சியில் உள்ள அனைவரிடமும் மிகவும் அன்பாக இருந்து வந்தார். கடைக்கோடி தொண்டர்கள் யார் வந்து உதவி கேட்டாலும் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்தும் வந்தார். இந்நிலையில் அவர் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரது மறைவு தமிழக மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்வோம்.

நாம் திறம்பட செயல் பட்டு கட்சியினை மேலும் வளர்ச்சி அடைய செய்வோம் என இந்நேரத்தில் உறுதியேற்றுக் கொள்வோம்். ஜெயலலிதா இறந்தவுடன் கட்சியை உடைத்து விடலாம் என பலர் எண்ணினர். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சசிகலா அமைச்சர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி 5-ந் தேதி இரவே முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுக்கச் செய்தார். இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானம்

கூட்டத்தில், வருங்காலங்களில் அனைவரையும் வழிநடத்திச் செல்ல கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் சுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள், கட்சியின் சார்பு அணியினர்் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story