சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது தாக்குதல்; ஆட்டோ டிரைவர் கைது


சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது தாக்குதல்; ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2016 7:37 PM GMT (Updated: 2016-12-19T01:07:23+05:30)

சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் சிவானந்தம்(வயது 37). இவர் சம்பவத்தன்று ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒன்று டாக்டர் மீது மோதுவது போல் வந்தது. இதுதொடர்பாக அவர் ஆட்டோ டிரைவரிடம் தட்டி க

சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் சிவானந்தம்(வயது 37). இவர் சம்பவத்தன்று ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒன்று டாக்டர் மீது மோதுவது போல் வந்தது. இதுதொடர்பாக அவர் ஆட்டோ டிரைவரிடம் தட்டி கேட்டார்.

இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் டாக்டர் சிவானந்தத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டாக்டரை தாக்கிய சேலம் மேட்டு மக்கான் தெருவை சேர்ந்த ரபீக்(24) என்பவரை கைது செய்தனர்.


Next Story