புழலில் வீட்டில் பதுக்கிய ரூ.1½ லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் வாலிபர் கைது


புழலில் வீட்டில் பதுக்கிய ரூ.1½ லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2016 9:00 PM GMT (Updated: 2016-12-19T01:42:28+05:30)

சென்னையை அடுத்த புழல் காந்தி மெயின் சாலையில் வசித்து வருபவர் சரவணகுமார் (வயது 30). இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக புழல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமை

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் காந்தி மெயின் சாலையில் வசித்து வருபவர் சரவணகுமார் (வயது 30). இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக புழல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சரவணகுமார் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அதில் அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கிவைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் சரவணகுமார், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள கடையில் இருந்து மொத்தமாக போதை பொருட்களை வாங்கி மினிவேனில் கொண்டு வந்து வீட்டில் பதுக்கி வைத்து புழல், செங்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரிந்தது. இதையடுத்து சரவணகுமாரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story