ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி காளையுடன் வந்து ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி காளையுடன் வந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 18 Dec 2016 8:47 PM GMT)

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி காளையுடன் வந்து ஆர்ப்பாட்டம்

மலைக்கோட்டை,

மத்திய அரசு, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டிப்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க கேட்டுக்கொள்வது என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்ட பொது செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட பொது செயலாளர் பழனிமாணிக்கம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் ஏ.டிஆர். தேவர், முருகையா தேவர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும் அழைத்து வந்திருந்தனர்.

Next Story