ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக தொகுதி வாரியாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் தகவல்


ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக தொகுதி வாரியாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:00 PM GMT (Updated: 18 Dec 2016 9:57 PM GMT)

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக நகராட்சிக்குட்பட்ட தொகுதி வாரியாக பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாக நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

புதுச்சேரி,

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக நகராட்சிக்குட்பட்ட தொகுதி வாரியாக பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாக நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஆலோசனை பெட்டிகள்

மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்மார்ட் சிட்டி இயக்கத்தால் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை தயாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி ஜெ.எல்.எல். கன்சல்டன்ட் என்கிற அமைப்பின் உதவியுடன் நகரத்தின் ஒருபகுதியை தேர்வு செய்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

இதற்காக கடற்கரை சாலை பழைய மேரி கட்டிடம், புதிய பஸ் நிலையம், கம்பன் கலையரங்கம், பழைய சிறைச்சாலை நுழைவு வாயில், முதலியார்பேட்டை நகராட்சி அலுவலகம், நகராட்சி வருவாய் அலுவலகம், முத்தியால்பேட்டை பாரதிதாசன் பெண்கள் கல்லூரி நுழைவு வாயில், மின்சார வாரியம், நெல்லித்தோப்பு நகராட்சி அலுவலகம், சுப்பையா சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுதி இந்த பெட்டிகளில் போடலாம்.

அதேபோல் mygov.in மற்றும் டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலமும் கருத்துக்களை தெரிவிக்கலாம். இதுதொடர்பாக புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட 42 வார்டு பகுதிகளிலும், வீடு வீடாக சென்று மக்களின் கருத்துக்கள் முகவர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக கருத்துகேட்பு கூட்டம்

இதுதவிர நகராட்சிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக கூட்டம் நடத்தி பொதுமக்களின் கருத்துக்களை அறியவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 21–ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை முத்தியால்பேட்டை சோலைநகரில் உள்ள சிங்காரவேலர் சமுதாய கூடத்திலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வாழைக்குளம் சமுதாய கூடத்திலும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது.

22–ந் தேதி கம்பன் கலையரங்கில் காலை 10 மணி முதல் 12 மணி வரை உப்பளம் தொகுதி பொதுமக்களிடமும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை உருளையன்பேட்டை தொகுதி மக்களிடமும் கருத்துக் கேட்கப்படுகிறது. 23–ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை டி.ஆர்.நகர் சமுதாய நலக்கூடத்தில் நெல்லித்தோப்பு தொகுதி மக்களிடமும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை தியாகு முதலியார்நகரில் உள்ள சமுதாய நலகூடத்தில் முதலியார்பேட்டை தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

24–ந் தேதி முருங்கப்பாக்கத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அரியாங்குப்பம் தொகுதி மக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story