வங்கியில் 400 அதிகாரி பணியிடங்கள்


வங்கியில் 400 அதிகாரி பணியிடங்கள்
x
தினத்தந்தி 19 Dec 2016 9:58 AM GMT (Updated: 19 Dec 2016 9:58 AM GMT)

பிரபல வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 400 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சிண்டிகேட் வங்கி. இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கு 400 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் முதுநிலை

பிரபல வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 400 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சிண்டிகேட் வங்கி. இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கு 400 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் முதுநிலை வங்கி - நிதிப் பணிகளுக்கான டிப்ளமோ பயிற்சியில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின்னர் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன், பயிற்சி நிறைவடைந்ததும் முதுநிலை டிப்ளமோ படிப்புக்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவினருக்கு 202 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 108 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 60 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங் களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-2016 தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1988 மற்றும் 1-10-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை படித்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வுசெய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் கடைசி நாள் 28-12-2016-ந் தேதியாகும். ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் உத்தேச நாள் 26-2-2017-ந் தேதி.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.syndicatebank.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Next Story