திருப்பத்தூரில் எலக்ட்ரிகல்ஸ் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு


திருப்பத்தூரில் எலக்ட்ரிகல்ஸ் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-19T21:20:26+05:30)

திருப்பத்தூரை சேர்ந்தவர் மோட்டோராவ். இவர் திருப்பத்தூரில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, மோட்டோராவ் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக மோட்டோராவ் வ

திருப்பத்தூர்,

திருப்பத்தூரை சேர்ந்தவர் மோட்டோராவ். இவர் திருப்பத்தூரில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, மோட்டோராவ் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக மோட்டோராவ் வந்தார். அங்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மோட்டோராவ் திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story