பள்ளி மாணவியுடன் கணவர் 2–வது திருமணம்: கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா


பள்ளி மாணவியுடன் கணவர் 2–வது திருமணம்: கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-20T01:40:13+05:30)

கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 35). இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமா (வயது 30). மில் தொழிலாளி. இவர்களுக்கு விகாஷ், பிரதிகா என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ப

கோவை,

கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 35). இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமா (வயது 30). மில் தொழிலாளி. இவர்களுக்கு விகாஷ், பிரதிகா என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரேமா தனது 2 குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென்று குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தினர்.

பின்னர் அவர் கலெக்டர் ஹரிகரனை சந்திந்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், எனது கணவர் சிவராஜிக்கு, 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. தற்போது அவர் அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். 2–வது திருமணம் செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் போலீசிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story