நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள்


நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-20T02:40:55+05:30)

நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள்

தூத்துக்குடி,

உலக வங்கி நிதியுதவியுடன், மீன்வளத்துறை மூலம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 21 மீனவ கிராமங்களில் பதிவு செய்து, எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு தலா 2 உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, 3 ஆயிரத்து 913 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்து 58 ஆயிரத்து 138 செலவில் உயிர்காப்பு மிதவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் நேற்று காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 10 மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராசய்யா, மீன்வளத்துறை இணை இயக்குனர் ரீனாசெல்வி, உதவி இயக்குனர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story