குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோபி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பொதுமக்கள் மனு

x
தினத்தந்தி 20 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-21T00:39:24+05:30)

கோபி அருகே உள்ள புதுவள்ளியாம்பாளையம் மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த வட்டார வளர்ச்சி அதிகாரி அக்தர் பேகத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த

கடத்தூர்,

கோபி

கோபி அருகே உள்ள புதுவள்ளியாம்பாளையம் மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த வட்டார வளர்ச்சி அதிகாரி அக்தர் பேகத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:–

கோபி ஊராட்சி ஒன்றியம், கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதி புதுவள்ளியாம்பாளையம் மேடு. இங்கு 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அந்த பகுதியில் 1 லட்சம் லிட்டர் மற்றும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டிக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் ஏற்றப்படுகிறது.

எங்கள் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக நாங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் ஒவ்வொரு தோட்டங்களுக்கும் நடந்து சென்று அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றில் குடிநீர் பிடித்து வருகிறோம்.

தற்போது தோட்டங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அதிகாரி அக்தர் பேகம், பொதுமக்களிடம் கூறுகையில், ‘புதுவள்ளியாம்பாளையம் மேடு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என உறுதி அளித்தார்.

கோபி அருகே...

இதேபோல் கோபி அருகே உள்ள புதுவள்ளியாம்பாளையம் மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த வட்டார வளர்ச்சி அதிகாரி அக்தர் பேகத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:–

Next Story