அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 11 கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 11 கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2016 9:45 PM GMT (Updated: 20 Dec 2016 7:09 PM GMT)

அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 11 கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் பவானியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 11 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை இடிக்

பவானி,

அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 11 கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் பவானியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு

அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 11 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை இடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகங்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, காடப்பநல்லூர், கேசரிமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கோவில்களை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கோவில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் பவானியில் உள்ள அந்தியூர் பிரிவு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில் பாலசுப்பிரமணியன், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில செயலாளர் கிஷோர் குமார், நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் உள்பட இந்து முன்னணியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


Next Story