ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு கலெக்டர் தகவல்


ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-21T02:32:56+05:30)

ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– காலக்கெடு நீடிப்பு தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம்

விழுப்புரம்

ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

காலக்கெடு நீடிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 16.12.16–க்குள் வர வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த காலக்கெடு வருகிற 30–ந் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807 அண்ணாசாலை, சென்னை என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இதர நிபந்தனைகளில் மாற்றம் ஏதும் இல்லை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story