செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-05T02:21:13+05:30)

செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சேலம்,

தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானதையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மு.க.ஸ்டாலின் தேர்வு

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அயோத்தியாப்பட்டணத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்து முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில், கோபு என்ற தங்கதுரை, ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் வெங்கட்ராசு, மாவட்ட பிரதிநிதி வீரமணி, பேரூர் அவைத்தலைவர் கந்தசாமி, ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர் பாக்கியம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தலைவாசல்-ஆட்டையாம்பட்டி

தலைவாசல் பஸ் நிலையத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் தலைவாசல் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் பிச்சமுத்து, மனோகர், குண்டு செந்தில், வெங்கடேசன், முருகேசன், யோகா ராமர், அன்வர், நாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வீரபாண்டி ஒன்றியம் எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி தி.மு.க. சார்பில் மேட்டுக்கடை பகுதியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பு ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி சேகர், அவைத்தலைவர் பழனிசாமி, கிளைக்கழக செயலாளர்கள் தேவராஜ், திருநாவுக்கரசு, தி.மு.க. பிரமுகர்கள் பாலு, ஜானகிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சங்ககிரி-ஓமலூர்

சங்ககிரியில் ஒன்றிய, நகர தி.மு.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் பழைய பஸ்நிலையம் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் முன்னாள் பால்வள தலைவர் சின்னதம்பி, முன்னாள் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் நவீன்சங்கர், பூலாவரி சரவணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர் குப்புசாமி, தமிழ்நாடு போக்குவரத்து தி.மு.க, தொழிற்சங்க செயலாளர் சிவகுமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமலூர் நகர தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஓமலூர் நகர செயலாளர் அப்துல்சமது, முன்னாள் நகர செயலாளர் ரவிசந்திரன், நகர அவைத்தலைவர் தேவராஜன், துணை செயலாளர் செல்லதுரை, ஓன்றிய ஆதிதிராவிடநல துணை செயலாளர் ஜெமினி, நகர இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூர் பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் ராமச்சந்திரன், சந்தோஷ்குமார், சிவம் ஆறுமுகம், வேல்முருகன், மணிகண்டன், ஸ்டீல்ராஜா, ராஜேந்திரன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆத்தூர் கடைவீதியில் மாணிக்கம் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். இதில் கமால்பாஷா, ராஜாமணி, துரை, வேலுமணி ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆத்தூர் ஒன்றியம் அப்பமசமுத்திரத்தில் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.

இதேபோல சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Next Story