சிவகிரி அருகே ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதல்; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்


சிவகிரி அருகே ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதல்; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Jan 2017 7:45 PM GMT (Updated: 2017-01-06T01:00:49+05:30)

சிவகிரி அருகே ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலியானார். மேலும் 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகிரி,

சிவகிரி அருகே ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலியானார். மேலும் 3 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்

புளியங்குடி டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் அரசு (வயது 70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (60). மேலக்கடையநல்லூர் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன், அவருடைய மனைவி இசக்கியம்மாள், அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி, அவருடைய மனைவி புஷ்பம் ஆகிய 6 பேரும் சிவகிரியில் இருந்து ராயகிரிக்கு ஒரு ஆட்டோவில் சென்றனர்.

ஆட்டோவை சிவகிரி சந்தை பேட்டை தெருவை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (45) என்பவர் ஓட்டினார். ஆட்டோ ராயகிரி காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது.

ஆட்டோ– மோட்டார் சைக்கிள் மோதல்

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், ஆட்டோவும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த அரசு, சுப்புலட்சுமி, முருகேசன், இசக்கியம்மாள், மாடசாமி, புஷ்பம் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ராயகிரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் (35) என்பவரும் படுகாயம் அடைந்தார்.

காயம் அடைந்த 3 பெண்கள் உள்பட 7 பேரும் சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அரசு பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 6 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ராமசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Next Story