குடியிருப்போர் நலச்சங்கம் அமைக்க திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை


குடியிருப்போர் நலச்சங்கம் அமைக்க திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Jan 2017 10:30 PM GMT (Updated: 2017-01-06T02:11:22+05:30)

குடியிருப்போர் நலச்சங்கம் அமைக்க திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை

திருக்கனூர்,

திருக்கனூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் அமைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்த ஆலோசனை கூட்டம் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் மோகன்குமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருக்கனூர் புதுநகர் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்களிடம், குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்குவதன் நோக்கம் குறித்து இன்ஸ்பெக்டர் மோகன்குமார் பேசினார். அப்போது வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசாருடன் இணைந்து அப்பகுதி இளைஞர்கள் செயல்படுவது குறித்து விளக்கினார்.

இதுபோல் பல்வேறு பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் தெரிவித்தார்.

Next Story