இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருவாரூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 178 வாக்காளர்கள் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்


இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருவாரூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 178 வாக்காளர்கள் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 8:44 PM GMT)

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருவாரூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 178 வாக்காளர்கள் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

இறுதி வாக்காளர் பட்டியல்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் 1.1.2017 தகுதி நாளாக கொண்டு நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 மன்ற தொகுதிகள் உள்ளன. 1.9.2016 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 4 மன்ற தொகுதிகளிலும் 4 லட்சத்து 84 ஆயிரத்து 176 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 86 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 71 ஆயிரத்து 178 வாக்காளர்கள் இருந்தனர். 2017 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்த வகையில் 4 மன்ற தொகுதிகளில் 13 ஆயிரத்து 230 ஆண் வாக்காளர்கள், 16 ஆயிரத்து 517 பெண் வாக்காளர்கள், 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 29 ஆயிரத்து 752 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் 4 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 726 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 74 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 800 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இணையதளத்தில்

இந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர், மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகங்களிலும், மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள சிறப்பு கிராமசபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் படித்து காண்பிக்கப்படும்.

வாக்காளர் பட்டியல்களை “லீ௴௴ஜீ://மீறீமீநீ௴வீஷீஸீ.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ” என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நேற்று முதல் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் தொடங்கியது. எனவே 1.1.2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் படிவம்-6, நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாறி குடியேறியவர்கள் படிவம் 8-ஏ வில் விண்ணப்பிக்கலாம். மேலும் “லீ௴௴ஜீ://மீறீமீநீ௴வீஷீஸீ.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ” இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின்போது வாக்காளர் பதிவு அலுவலர்களான உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி) மற்றும் அனைத்து கட்சியினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story