வாக்காளர் பட்டியல் வெளியீடு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 37 லட்சம் வாக்காளர்கள்


வாக்காளர் பட்டியல் வெளியீடு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 37 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2017 9:43 PM GMT (Updated: 2017-01-06T03:13:27+05:30)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்த வாக்காளர் பட்டியலை கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டார். அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 37 லட்சத்து 35 ஆயிரத்து 553 வாக்காளர்கள் உள்ளனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்த வாக்காளர் பட்டியலை கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டார். அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 37 லட்சத்து 35 ஆயிரத்து 553 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அடங்கிய 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சிறப்பு சுருக்கமுறை திருத்த வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 1.9.2016 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 39 ஆயிரத்து 797 ஆகும். தற்போது நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதியதாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 974 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 49 ஆயிரத்து 349, பெண்கள் 54 ஆயிரத்து 583 மற்றும் இதர பாலினத்தார் 42 பேர் ஆகும். மேலும் 8 ஆயிரத்து 218 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 974 வாக்காளர்களில் 18 வயதில் இருந்து 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் மொத்தம் 26 ஆயிரத்து 384 பேர் ஆகும்.

சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆண்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 816, பெண்கள் 3 லட்சத்து 9 ஆயிரத்து 443, இதர பாலினத்தார் 74, மொத்தம் 6 லட்சத்து 22 ஆயிரத்து 333.

ஆலந்தூர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 48, பெண்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்து 556, இதர பாலினத்தார் 14, மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 618.

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 53 ஆயிரத்து 832, பெண்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 601, இதர பாலினத்தார் 37, மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரத்து 470.

பல்லாவரம் தொகுதியில் ஆண்கள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 60, பெண்கள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 529, இதர பாலினத்தார் 22, மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 611 .

தாம்பரம் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 312, பெண்கள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 524, இதர பாலினத்தார் 35, மொத்தம் 3 லட்சத்து 90 ஆயிரத்து 871 .

செங்கல்பட்டு

செங்கல்பட்டு தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 88 ஆயிரத்து 374, பெண்கள் 1 லட்சத்து 93 ஆயிரத்து 696, இதர பாலினத்தார் 43, மொத்தம் 3 லட்சத்து 82 ஆயிரத்து 113 .

திருப்போரூர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 46, பெண்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 778, இதர பாலினத்தார் 19, மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 843.

செய்யூர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 138, பெண்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 524, இதர பாலினத்தார் 29, மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 691 .

மதுராந்தகம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 3, பெண்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 404, இதர பாலினத்தார் 25, மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 432.

காஞ்சீபுரம்

உத்திரமேரூர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 784, பெண்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 457, இதர பாலினத்தார் 13, மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 254 .

காஞ்சீபுரம் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 384, பெண்கள் 1 லட்சத்து 53 ஆயிரத்து 923, இதர பாலினத்தார் 10, மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 317.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்கள் 18 லட்சத்து 47 ஆயிரத்து 797, பெண்கள் 18 லட்சத்து 87 ஆயிரத்து 435, இதர பாலினத்தார் 321, மொத்தம் 37 லட்சத்து 35 ஆயிரத்து 553 பேர்.

வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், சப்-கலெக்டர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சவுரிராஜன், சப்-கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Next Story