ஜல்லிக்கட்டு நடத்த லட்சிய தி.மு.க. தொடர்ந்து போராடும் இயக்குனர் டி.ராஜேந்தர் பேட்டி


ஜல்லிக்கட்டு நடத்த லட்சிய தி.மு.க. தொடர்ந்து போராடும் இயக்குனர் டி.ராஜேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2017 11:30 PM GMT (Updated: 7 Jan 2017 4:59 PM GMT)

ஜல்லிக்கட்டு நடத்த லட்சிய தி.மு.க. தொடர்ந்து போராடும் என சினிமா இயக்குனர் டி.ராஜேந்தர் கூறினார். வாடிவாசல் திறப்பு மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவில் அருகே, மாடு வளர்ப்போர் சார்பில் வாடிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தி

மதுரை,

ஜல்லிக்கட்டு நடத்த லட்சிய தி.மு.க. தொடர்ந்து போராடும் என சினிமா இயக்குனர் டி.ராஜேந்தர் கூறினார்.

வாடிவாசல் திறப்பு

மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவில் அருகே, மாடு வளர்ப்போர் சார்பில் வாடிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகரும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:–

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவது பற்றி மத்திய அரசிடம், மாநில அரசு குரல் கொடுக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் சுய மரியாதையுடன் போராடிய முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இந்தப் பிரச்சினை இருந்திருக்காது. அவர் இல்லாத காரணத்தால் தான் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக தடையின் காரணமாக நடைபெறவில்லை. இது 3–வது ஆண்டாக நீடிக்காமல் இருக்க போராட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக லட்சிய தி.மு.க. தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் இருந்தும், அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. எம்.பி.க்கள் பயப்படுபவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமங்கலம்

ஜல்லிக்கட்டு நடத்த கோரி மதுரை திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசும்போது, நான் கட்சி தலைவனாகவோ, இயக்குனராகவோ இங்கு வரவில்லை. தமிழனாக தமிழ் இனசிங்கமாக வந்துள்ளேன். இது எங்கள் தமிழ் இன வீர விளையாட்டு. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. தடையை உடைக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மொக்கராஜ், லட்சிய தி.மு.க. மாவட்ட செயலாளர் கர்ணன், தலைவர் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story