மழை பெய்ய வேண்டி விளநகர் சுயம்பு சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு


மழை பெய்ய வேண்டி விளநகர் சுயம்பு சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 13 Jan 2017 10:30 PM GMT (Updated: 13 Jan 2017 5:38 PM GMT)

செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் சுயம்பு சீரடி சாய்பாபா கோவில் உள்ளது.

ஆக்கூர்,

செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் சுயம்பு சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பாபாவுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் ஒன்றுக்கூடி 108 நெய்தீபம் ஏற்றி மழை பெய்ய வேண்டி கூட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் செம்பனார்கோவில், பரசலூர், விளநகர், ஆறுபாதி, மேலப்பாதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story