தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுங்கள்’ சிவசேனா மந்திரிகளுக்கு உத்தவ் தாக்கரே கட்டளை


தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுங்கள்’ சிவசேனா மந்திரிகளுக்கு உத்தவ் தாக்கரே கட்டளை
x
தினத்தந்தி 13 Jan 2017 11:27 PM GMT (Updated: 13 Jan 2017 11:27 PM GMT)

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபடுமாறு மந்திரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

மும்பை

உத்தவ் தாக்கரே ஆலோசனை

மும்பை உள்பட 10 மாநகராட்சிக்கும், பல்வேறு மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், கட்சிகளுக்கு இடையே ஆன கூட்டணி இன்னமும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் மந்திரிகளையும், மூத்த தலைவர்களையும் உத்தவ் தாக்கரே நேற்று தன்னுடைய வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மும்பை மாநகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த தீவிர பிரசாரத்தில் ஈடுபடுமாறு அவர்களுக்கு உத்தவ் தாக்கரே கட்டளை பிறப்பித்தார். இந்த சந்திப்பில் மந்திரிகள் சுபாஷ் தேசாய், ராம்தாஸ் கதம், தீபக் சாவந்த், தீபக் கேசர்கர், விஜய் சிவ்தாரே, அர்ஜூன் கோத்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உன்னிப்பாக கவனிக்கிறார்

கூட்டம் முடிந்து வெளியே வந்த சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் சிவசேனா மந்திரிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கட்டளையிட்டார். தேர்தலை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்’’ என்றார்.

மந்திரி சுபாஷ் தேசாய் கூறுகையில், ‘‘நாங்களும், பாரதீய ஜனதாவும் சேர்ந்து மும்பைக்காக பல நற்பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் செய்திருக்கிறோம். பா.ஜனதா உடனான அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்’’ என்றார்.


Next Story