தமிழக காவல்துறையில் 15,711 பணியிடங்கள்


தமிழக காவல்துறையில் 15,711 பணியிடங்கள்
x
தினத்தந்தி 30 Jan 2017 8:31 AM GMT (Updated: 30 Jan 2017 8:31 AM GMT)

தமிழக சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் (TNUSRB) , காவல் துறையில் கிரேடு-2 தரத்திலான கான்ஸ்டபிள், ஜெயில் வார்டர், தீயணைப்பு வீரர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.

 மொத்தம் 15 ஆயிரத்து 711 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் கான்ஸ்டபிள் பணிக்கு 13 ஆயிரத்து 183 பேரும், ஜெயில் வார்டர் பணிக்கு ஆயிரத்து 16 பேரும், தீயணைப்பு வீரர் பணிக்கு ஆயிரத்து 512 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:


10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், இவற்றுக்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

கட்டணம் :


விண்ணப்பதாரர்கள் ரூ.135 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.30 மட்டும் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கரெடிட்கார்டு வழியாகவும், வங்கி செலான் மூலமாக வங்கிகளிலும் செலுத்த முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 22-2-2017-ந் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு 21-5-2017-ந் தேதிநடைபெறும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnusrbexams.net என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Next Story